1,500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் திருக்கோயிலினை புதுப்பித்து குடமுழுக்கு செய்தால் கிராமம் நன்மை அடையுமென ஊர் மக்கள் கோவில் நிர்வாகத்திடம் கோரிக்கை வைத்துள்ளனர்
திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பென்னாத்தூர் அடுத்த எரும்பூண்டி கிராமத்தில் சுமார் 1500 ஆண்டுகள் பழமை வாய்ந்த வீரட்டேஸ்வரர் திருக்கோயில் 380 சதுர அடியில் கருங்கற்களால் கட்டப்பட்டுள்ளது. பல்வேறு பெருமை வாய்ந்த இந்த கோவிலின் மேல்பகுதி, கோபுரம், சிற்பங்கள் மற்றும் வழிப்படிகள் சிதைவடைந்துள்ளதால் அதனை சரி செய்து கோவிலுக்கு குடமுழுக்கு செய்தால் தங்கள் கவலை நீங்கும் என மக்கள் நம்புவதாக கோவில் நிர்வாக செயளாலர் கூறியுள்ளார்.