பதினான்காவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் இந்தியாவில் நாளை துவங்க உள்ளது.
ஒடிஷா தலைநகர் புவனேஸ்வரில் பதினான்காவது உலகக் கோப்பை ஹாக்கி தொடர் நாளை துவங்க உள்ளது. இப்போட்டியில் இந்தியா, பாகிஸ்தான் மற்றும் நடப்பு சாம்பியனான ஆஸ்திரேலியா உள்ளிட்ட 16 அணிகள் பங்கேற்கின்றன. இதற்காக 15 நாடுகளை சேர்ந்த அணிகள் இந்தியா வந்து சேர்ந்துள்ளன.
இப்போட்டிகளில் ஏ, பி, சி மற்றும் டி பிரிவுகளாக பிரிந்து அணிகள் மோத உள்ளன. சி பிரிவில் இந்தியா, கனடா, தென்னாப்பிரிக்கா மற்றும் பெல்ஜியம் அணிகள் இடம்பெற்றுள்ளன. இந்திய அணி 1975-ல் உலகக் கோப்பை வென்றது. இந்நிலையில் சொந்த மண்ணில் நடைபெறும் உலகக் கோப்பை போட்டியில், 43 ஆண்டுகளுக்கு பிறகு கோப்பையை வெல்லும் முனைப்புடன் மன்ப்ரீத் சிங் தலைமையிலான இந்திய அணி தயாராகி உள்ளது.
இதற்கான கோப்பை அறிமுக நிகழ்ச்சி நேற்று ஒடிஷா முதல்வர் நவீன் பட்நாயக் தலைமையில் நடைபெற்றது. இதில் 16 அணிகளின் கேப்டன்கள் பங்கேற்றனர்.