காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத்தை முன்னிட்டு தளர்த்தப்பட்டது 144 தடை

காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் பக்ரீத், சுதந்திர தினக் கொண்டாட்டத்தை முன்னிட்டு இயல்பு நிலை திரும்பி வருகிறது.

காஷ்மீருக்குச் சிறப்புத் தகுதி வழங்கும் அரசியல் சட்டத்தின் 370ஆவது பிரிவு நீக்கப்பட்டதை அடுத்து அங்குப் பெருமளவில் ராணுவ வீரர்கள் குவிக்கப்பட்டனர். பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்பட்டதாலும் பல்வேறு பகுதிகளில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாலும் தெருக்கள் வெறிச்சோடிக் காணப்பட்டன. பக்ரீத், சுதந்திர தினம் ஆகிய விழாக்களை முன்னிட்டு 144 தடை உத்தரவு விலக்கிக் கொள்ளப்பட்டது. இதையடுத்து ஸ்ரீநகரின் பல்வேறு பகுதிகளில் குவிக்கப்பட்டிருந்த ராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறி வருகின்றனர். பக்ரீத் பெருநாள் கொண்டாட்டத்துக்காகத் தெருக்களில் பொதுமக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளது.

Exit mobile version