நகராட்சி அமைப்புகளில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு அரசிதழில் வெளியிடப்படும்

உள்ளாட்சி தேர்தலுக்கான வார்டு வரையறை செய்யப்பட்ட பட்டியல் 15ஆம் தேதிக்குள் அரசிதழில் வெளியிடப்படும் என, தமிழக அரசு அறிவித்துள்ளது.

இதுகுறித்து அரசு தமிழக அரசு வெளியிட்டுள்ள அறிவிக்கையில், நகராட்சி அமைப்புகளில் உள்ள 124 நகராட்சிகளில் வார்டு மறுவரையறை செய்யப்பட்டு, அரசிதழில் 15ம் தேதிக்குள் வெளியிடப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில், ஒவ்வொரு வார்டின் எல்லை, தெருக்களின் விவரங்கள் அடங்கியிருக்கும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. பொதுமக்களின் வசதிக்காக இது அரசிதழில் வெளியிடப்படுகிறது என்றும் அதன் பின்னர் வார்டுகளில் சாதி வாரியான இட ஒதுக்கீடு பிரிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.

 

 

 

Exit mobile version