சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் 100 அடி உயர பிரமாண்ட கம்பத்தில், 24 மணி நேரமும் பறக்கும் விதமாக மிகப்பெரிய தேசிய கொடி ஏற்றப்பட்டது.
சென்னையில் முக்கியமான அடையாளங்களில் ஒன்றாக திகழும் சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்தில் தொடர்ந்து 24 மணி நேரமும் பறக்கும் தேசிய கொடி ஏற்றப்பட்டது. 100 அடி உயரமுள்ள கம்பத்தில், கட்டப்பட்ட தேசிய கொடியை தென்னக ரயில்வேயின் பொது மேலாளர் குல்ஷேத்ரா ஏற்றி வைத்தார். முழுமையான மின் இணைப்பு மூலம் ஏற்றப்படும் இக்கொடியானது முழுமையாக மேலேற 15 நிமிடங்கள் வரை ஆகும் எனக் கூறப்படுகிறது. மேலும் 13 லட்ச ரூபாய் செலவில் உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசிய கொடியானது 30 அடி நீளம் 20 அடி அகலத்துடன் ஒன்பதரை கிலோ எடை கொண்டுள்ளது என்றும், தெரிவிக்கப்பட்டுள்ளது. கோவை ரயில் நிலையத்தில், இதே அளவிலான கொடி ஏற்றப்பட்டதை தொடர்ந்து 2வதாக சென்னையில் ஏற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.