நியாயத்தின் பக்கம் நின்றவர்களுக்கு எஸ்.பி.வேலுமணி நன்றி

அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது, நியாயத்தின் பக்கம் நின்றவர்களுக்கு சட்டமன்ற அதிமுக கொறடா எஸ்.பி. வேலுமணி நன்றி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக ட்விட்டரில் அவர் விடுத்துள்ள செய்தியில், அரசியல் காழ்ப்புணர்ச்சி காரணமாக திமுக அரசின் அரசியல் பழிவாங்கும் நடவடிக்கையின்போது,

நியாயத்தின் பக்கம் நின்றும், தனக்கு நம்பிக்கையூட்டு வகையிலும் ஆதரவாக நின்ற கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கும், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் நன்றி தெரிவித்துள்ளார்.

மேலும், அதிமுக சட்டமன்ற உறுப்பினர்கள், முன்னாள் அமைச்சர்கள், கழக நிர்வாகிகள், கூட்டணி கட்சி நிர்வாகிகள் உள்ளிட்ட அனைவருக்கும் எஸ்.பி. வேலுமணி மனமார்ந்த நன்றியை தெரிவித்துள்ளார்.

Exit mobile version