ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்த தமிழக அரசின் உத்தரவை உறுதிபடுத்தியுள்ளது உச்ச நீதிமன்றம். தமிழக அரசின் தொடர் சட்டப்போராட்டத்திற்கு தூத்துக்குடி மக்கள் நன்றியும், பாராட்டும் தெரிவித்துள்ளனர். சுற்றுச்சூழலை கருத்தில் கொண்டு தமிழக அரசு ஸ்டெர்லைட் ஆலைக்கு தடை விதித்தது. இந்த உத்தரவிற்கு எதிராக தேசிய பசுமை தீர்ப்பாயம், ஆலையை மீண்டும் திறக்கலாம் என்று அறிவித்தது.
இந்த விவகாரத்தில் தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்திருந்தது. இந்த வழக்கின் மீதான விசாரணையில் ஸ்டெர்லைட் ஆலையை திறக்க தடை விதித்து நீதிமன்றம் உத்தவிட்டது. இதற்கு வரவேற்பு தெரிவித்துள்ள தூத்துக்குடி பொதுமக்கள் பட்டாசு வெடித்தும், இனிப்புகள் வழங்கியும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.