பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாத மீனங்குடி சாலையை சீரமைமைத்த தமிழக அரசுக்கு ராமநாதபுரம் மீனங்குடி வாழ் பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
மீனங்குடி ஊராட்சியில் கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக முறையான சாலை வசதிகள் இல்லாததால் பொதுமக்கள் மட்டுமின்றி இப்பகுதியிலிருந்து பள்ளி, கல்லூரிக்கு செல்லும் மாணவ மாணவிகள் மிகவும் அவதியடைந்து வந்தனர். இந்நிலையில் இப்பகுதி பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மூன்று கோடியே முப்பது இலட்சம் மதிப்பீட்டில் சாலையை சீரமைத்தது. நீண்ட வருடங்களாக சாலை வசதி இல்லாமல் பத்திற்கும் மேற்பட்ட கிராமங்களை இணைத்து சாலை வசதி ஏற்ப்படுத்தி கொடுத்த தமிழக அரசுக்கு இப்பகுதி பொதுமக்கள், மாணவர்கள நன்றி தெரிவித்துள்ளனர்.