வேடசந்தூரில் பொதுமக்களின் 30 ஆண்டுகால கோரிக்கையை நிறைவேற்றிய தமிழக அரசிற்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அழகாபுரி, பாலப்பட்டி, பெருமாள்கோவில்பட்டி உள்ளிட்ட பகுதிகளில் அடிப்படை வசதிகளை நிறைவேற்ற பல ஆண்டுகளாக பொதுமக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இந்த பகுதிகளில் அடிப்படை வசதி செய்ய கோரிக்கை விடுத்து வந்ததாக கூறப்படுகிறது. இதனை ஏற்று தமிழக அரசு 60 லட்ச ரூபாய் செலவில், அடிப்படை வசதிகளுக்கான பூமி பூஜை பணிகள் தொடங்கியது . இதனால் மகிழ்ச்சி அடைந்த அப்பகுதி மக்கள் தமிழ் நாடு அரசிற்கும், முதலமைச்சருக்கும் நன்றி தெரிவித்தனர்.