ஜெயங்கொண்டம் பகுதியில் தமிழக அரசின் நடவடிக்கையால் ஏரி, குளங்களில் நீர் அதிகரித்ததற்கு மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள் வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்தனர். தமிழகம் முழுவதும் உள்ள ஏரி,குளங்கள் தூர்வாரப்படுவதுடன் வண்டல் மண் எடுப்பதற்கும் அரசு அனுமதி வழங்க வேண்டும் என தமிழக அரசுக்கு விவசாயிகள் கோரிக்கை வைத்து இருந்தனர். இந்நிலையில் தமிழக விவசாயிகளின் கோரிக்கையை கருணையுடன் ஏற்றுகொண்ட முதலமைச்சர் பழனிசாமி ஏரி, குளங்களில் விவசாயிகள் இலவசமாக வண்டல் மண் எடுக்க கடந்த 2017 ஆம் ஆண்டு ஆணை பிறப்பித்தார்.
இந்த திட்டம் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்ற நிலையில் தமிழகம் முழுவதும் உள்ள ஏரி, குளங்கள் அதிகளவில் வெட்டப்பட்டன. இதனையடுத்து கடந்தாண்டு பெய்த கனமழையின் காரணமாக ஏரி குளங்கள் நிரம்பியதையடுத்து மகிழ்ச்சி தெரிவித்த பொதுமக்கள் இதற்கு தமிழக அரசு மேற்கொண்ட தூரித நடவடிக்கையே காரணம் எனவும் தெரிவித்தனர். இத்திட்டம் இந்த ஆண்டும் தொடரவும் கோரிக்கை விடுத்துள்ளனர்.