கோரிக்கையை ஏற்று மதுரையில் புதிய சாலை அமைத்ததற்காக பொது மக்கள் அரசுக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.
மதுரை மாவட்டம் அவனியாபுரம் – குசவன் குண்டு இடையே புதிய சாலை அமைக்க அமைக்க வேண்டுமேன கிராம மக்கள் கோரிக்கை வைத்து வந்தனர். இதனை ஏற்ற தமிழக அரசு பிரதமரின் கிராமப்புற சாலைகள் திட்டத்தின் கீழ் 1 கோடியே 73 லட்சம் செலவில் புதிய சாலையை அமைத்து கொடுத்துள்ளது. இதனையடுத்து கிராம மக்கள் அரசிற்கு நன்றி தெரிவித்துள்ளனர். புதிய சாலை அமைக்கப்பட்டதால், வாகன ஓட்டிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.