எடப்பாடி நகராட்சியை மேம்படுத்தும் வகையில் பல்வேறு நலத் திட்டங்களை செயல்படுத்திய முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.
தமிழக முதலமைச்சராக பழனிசாமி பதவியேற்ற 2 ஆண்டுகளில் எடப்பாடி நகராட்சிக்கு பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தியுள்ளார். அதனடிப்படையில், பொன்விழா ஆண்டு சிறப்பு திட்டத்திற்கு மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவால் வழங்கப்பட்ட 25 கோடியில் அமைக்கப்பட்ட எடப்பாடி நினைவுத்தூணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். மேலும், எடப்பாடி பேருந்து நிலையம் அருகில் 24 லட்சம் மதிப்பில் புதுப்பிக்கப்பட்ட ராஜாஜி பூங்கா, எடப்பாடி அடுத்த வெள்ளாண்டி வலசு பகுதியில் 5 கோடி மதிப்பில் கட்டப்படும் புதிய நகராட்சி கட்டிடம், 4 கோடி மதிப்பில் 4 இடங்களில் கட்டப்பட்டு வரும் திடக்கழிவு மேலாண்மை வளாக கட்டிடம் உள்ளிட்டவைகளுக்கு பூமி பூஜை போட்டு முதலமைச்சர் பழனிசாமி பணிகளை தொடங்கி வைத்தார். பல்வேறு நலத்திட்டங்கள் செயல்படுத்திய முதலமைச்சருக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்.