கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் பயன்பெறக்கூடிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற நடவடிக்கை எடுத்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர். கோவை, திருப்பூர் மற்றும் ஈரோடு ஆகிய மூன்று மாவட்டங்களும் பயன்பெறக்கூடிய அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்ற வேண்டும் என்று விவசாயிகள் நீண்டகாலமாக கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதனை ஏற்று, இந்த திட்டத்தை செயல்படுத்துவதற்காக ஆயிரத்து 652 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்தது. இந்தத் திட்டத்தால் 843 ஊராட்சிகளில் உள்ள சுமார் 74 குளங்கள் , 971 குட்டைகளில் நீர் நிரப்பப்படுவதோடு, அப்பகுதி மக்களின் வாழ்வாதாரம் உயரும்.
இந்நிலையில் இந்த திட்டத்திற்கான அடிக்கல் நாட்டு விழா விரைவில் நடைபெறவுள்ளது. 60 ஆண்டு கால கோரிக்கையை நிறைவேற்றி தந்த முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் நன்றி தெரிவித்துள்ளனர்.