மத்திய அரசின் அறிவிப்புக்கு சுப்பிரமணியன் குடும்பத்தினர் நன்றி

புல்வாமா தாக்குதலில் உயிரிழந்த சிஆர்பிஎஃப் வீரர்களின் குடும்பங்களுக்கு 1 கோடி ரூபாய் நிதியுதவியை மத்திய அரசு அறிவித்தது. இந்த அறிவிப்பிற்கு, தாக்குதலில் வீரமரணம் அடைந்த கோவில்பட்டியைச் சேர்ந்த சிஆர்பிஎஃப் வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினர் நன்றி தெரிவித்துள்ளனர்.

காஷ்மீரில், புல்வாமா மாவட்டத்தில் கடந்த 14ந்தேதி தீவிரவாதிகளின் தற்கொலைப்படை தாக்குதலில் 40 சி.ஆர்.பி.எப் வீரர்கள் வீர மரணம் அடைந்தனர். இதையடுத்து, அந்தந்த மாநில அரசுகள் மற்றும் பல்வேறு தரப்பிலிருந்தும் உயிர்நீத்த வீரர்களின் குடும்பங்களுக்கு உதவிக்கரம் நீண்டு வருகிறது. இந்நிலையில், வீரர்களின் குடும்பங்களுக்கு, 1 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படுவதாக மத்தியரசு அறிவித்துள்ளது. இதற்கு தீவிரவாத தாக்குதலில் வீரமரணம் அடைந்த தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி சவலப்பேரியை சேர்ந்த சி.ஆர்.பி.எப். வீரர் சுப்பிரமணியன் குடும்பத்தினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். பணம் எவ்வளவு கொடுத்தலும், உயிரை திருப்பிக் கொண்டு வர இயலாது, இருந்தாலும் மத்திய அரசின் அறிவிப்புக்கு நன்றி தெரிவித்துள்ளனர்.

Exit mobile version