வரும் 11ம் தேதி இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் நிகழ்ச்சி

கோவையில் தென்மேற்கு, வடகிழக்கு பருவமழையினால் நீர் நிலைகள் நிரம்பி வழிவதை கொண்டாடும் வகையில் வரும் 11ம் தேதி, இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கலந்து கொள்கிறார்.

கோவை தனியார் பள்ளியில், வரும் 11ம் தேதி, இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் என்ற நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்,கடந்த 50 வருடங்களில் இல்லாத அளவிற்கு இந்த வருடம் கோவையில் மழை பொழிவு அதிகரித்துள்ளது. வருட சராசரி மழை அளவான 674 மில்லி மீட்டரை விட 750 மில்லி மீட்டர் மேலாக மழை பதிவாகியுள்ளது. இந்த நிலையில், இயற்கை அன்னைக்கு நன்றி மாமழை போற்றுதும் என்ற நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ் பி வேலுமணி கலந்து கொள்கிறார். கடந்த வருடம் நல்ல மழை பெய்ததற்கு முக்கிய காரணம் அரசு மிக உறுதுணையாக இருந்தாகவும், நீர்நிலைகள் அனைத்தும் நிரம்பி உள்ளதாகவும், தற்போது நீர்நிலைகளைப் பாதுகாக்க பொதுமக்களும் முன்வருவது மகிழ்ச்சியை ஏற்படுத்துவதாகவும் தனியார் அமைப்பின் நிறுவனர் தெரிவித்துள்ளார்.

Exit mobile version