திருச்சியில் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றிப் பெற்றதற்கான நன்றி அறிவிப்புக் கூட்டத்தில், எம்.பி வராமலேயே நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றதால் திமுக தொண்டர்கள் அதிருப்தியடைந்தனர்.
திருச்சி தொகுதியில் வெற்றி பெற்றதற்கு திமுக சார்பில் நன்றி அறிவிப்புக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த எம்பி திருநாவுக்கரசு வருவார் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால் திருநாவுக்கரசு கலந்து கொள்ளாமலேயே கூட்டம் நடைபெற்றது . நன்றி அறிவிப்பு கூட்டத்தில் கலந்துகொண்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களுக்கு பிரியாணி விருந்துக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரியாணி விருந்து வழங்கும் போது திமுக கட்சி நிர்வாகிகளும் தொண்டர்களும் பிரியாணியை பெறுவதற்காக தள்ளு முள்ளில் ஈடுப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.