தென்காசியை தனி மாவட்டமாக அறிவித்ததற்கு தென்காசி வழக்கறிஞர் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது.
சட்டப்பேரவையில் 110 விதியின் கீழ் தென்காசியை தலைமையிடமாக கொண்டு தனி மாவட்டம் அமைக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்தார். இந்த அறிவிப்பிற்கு பொது மக்கள் வரவேற்பு தெரிவித்து வரும் நிலையில், தென்காசி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் நன்றி தெரிவிக்கும் கூட்டம் நடைபெற்றது. முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கும், தென்காசி தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் செல்வ மோகன்தாஸ் பாண்டியனுக்கும் இந்தக் கூட்டத்தில் நன்றி தெரிவிக்கப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் மூத்த வழக்கறிஞர் குமார் பாண்டியன் உள்பட ஏராளமனோர் கலந்து கொண்டனர்.