நல்ல மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக கல்லூரியில் சேர முடியாமல் தவித்து வந்த மாணவிக்கு உதவிய மாவட்ட ஆட்சியரை பலரும் பாராட்டி வருகின்றனர்.
திருவண்ணாமலை மாவட்டம் பிர்கா உடையார் குப்பம் கிராமத்தைச் சேர்ந்த காமாட்சி என்ற மாணவி 12 ஆம் வகுப்பில் நல்ல மதிப்பெண்கள் பெற்றும் குடும்ப சூழ்நிலை காரணமாக படிக்க முடியாமல் அவதிப்பட்டு வந்தார். அவருக்கு வேலூர் அரசு கல்வியியல் கல்லூரியில் சேர அனுமதி ஆணையும் வழங்கியும், அரசு விடுதியில் தங்கிப் பயிலவும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சித் தலைவர் கந்தசாமி ஏற்பாடு செய்துள்ளார்.
காமாட்சி குடிசை வீட்டில் வசிப்பதை அறிந்து அவருக்கு முதலமைச்சரின் பசுமை வீடு திட்டத்தின் கீழ் வீடு கட்ட ஆணை பிறப்பித்து, கட்டி முடிக்கப்பட்ட வீட்டிற்கு அவர் வருகை தந்தார். காமாட்சியின் பெற்றோருக்கு முதியோர் உதவித்தொகை கிடைப்பதற்கான ஆணையும் ஆட்சியர் வழங்கியுள்ளார். அவருக்கு மாணவி காமாட்சி கண்ணீர் மல்க நன்றி தெரிவித்தார்.