நாமக்கல் மாவட்டத்தில் பல்வேறு நலத்திட்டங்களை மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். திருச்செங்கோட்டில் ஆவின் பால் விற்பனை அலுவலகம் மற்றும் 24 மணி நேரமும் செயல்படக்கூடிய நவீன பாலகத்தையும் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். முன்னதாக, எலச்சிப்பாளையம் வட்டாரத்தில் ஒரு கோடியே 50 லட்சம் ரூபாய் செலவில், புதிய தார் சாலைகள் அமைக்கும் பணிகளைத் தொடங்கி வைத்தார்.
இதைதொடர்ந்து மன்னார் பாளையத்தில் 8 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பில் கட்டப்பட்ட புதிய அங்கன்வாடி மையத்தையும் அமைச்சர் தங்கமணி திறந்து வைத்தார். இதேபோல் எலச்சி பாளையம் ஒன்றியம் அகரம் ஊராட்சியை சேர்ந்த 67 பயனாளிகளுக்கு 26 லட்சம் ரூபாய் மதிப்பிலான விலையில்லா கறவை மாடுகளையும் அமைச்சர் தங்கமணி வழங்கினார். பயனாளிகள் தமிழக அரசுக்கு மனமார்ந்த நன்றியை தெரிவித்துக் கொண்டனர்.