புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா – அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார்

நாமக்கல் மாவட்டத்தில் 6 கோடி மதிப்பிலான புதிய திட்டப் பணிகளுக்கு மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி அடிக்கல் நாட்டினார். படைவீடு பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் புதிய திட்டப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டு விழா நடைபெற்றது. பேருந்து நிறுத்தம் கட்டுதல், ஏரி மேம்பாடு செய்தல், புதிதாக தார் சாலைகள் அமைத்தல், அங்கன்வாடி கட்டடம் அமைத்தல் உள்ளிட்ட 8 பணிகளுக்கு மொத்தம் 6 கோடியே 29 லட்சம் மதிப்பீட்டில் அடிக்கல் நாட்டி வைத்து, அதற்கான பணிகளையும் அமைச்சர் தங்கமணி தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில், திருச்செங்கோடு வருவாய்க் கோட்டாட்சியர் மணிராஜ், குமாரபாளையம் வட்டாட்சியர் தங்கம் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

Exit mobile version