கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை!!

நெல்லையில் தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதை அடுத்து, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் பெய்து வரும் கனமழை காரணமாக பாபநாசம், சேர்வலாறு அணைகளில் நீர்மட்டம் வேகமாக உயர்ந்துள்ளது. அணையில் இருந்து உபரிநீர் திறப்பு அதிகரிக்கப்பட்டதால், தாமிரபரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில், இதுகுறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் விஷ்ணு வெளியிட்டுள்ள அறிக்கையில், பாபநாசம், சேர்வலாறு அணைகள் முழுக்கொள்ளளவை எட்டும் நிலையில் உள்ளதால்,அணைகளில் இருந்து தாமிரபரணி ஆற்றில் 12 ஆயிரத்து 480கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருவதாக குறிப்பிட்டுள்ளார்.

இதனால், தாமிரபரணி ஆற்றின் இருகரையோர பகுதிகளில் வசிக்கும் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறும், ஆற்றில் இறங்கவோ, கடக்கவோ, புகைப்படங்கள் எடுக்கவோ வேண்டாம் எனவும் வலியுறுத்தியுள்ளார்.

Exit mobile version