தாமிரபரணி மகா புஷ்கர விழா நிறைவு விழாவையொட்டி ஏராளமான பக்தர்கள் புனித நீராடல்

144 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும் தாமிரபரணி மகா புஷ்கர விழா, கடந்த 11ம் தேதி தொடங்கியது. இதையொட்டி, நெல்லை, தூத்துக்குடி மாவட்டங்களில் 149 படித்துறையில் விழா நடைபெற்று வருகிறது. மகா புஷ்கர விழாவையொட்டி, கடந்த 12 நாட்களாக ஏராளமான மக்கள் புனித நீராடி வருகின்றனர். ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடகம், கேரளா உள்ளிட்ட மாநிலங்களை சேர்ந்த திரளான பக்தர்கள், நெல்லை, தூத்துக்குடியில் உள்ள தீர்த்தக்கட்டங்களில் புனித நீராடினர். 13 நாட்களாக வெகு சிறப்பாகக் கொண்டாடாப்பட்டு வந்த தாமிரபரணி மகா புஷ்கர விழா இன்று மாலையுடன் நிறைவடைந்தது.

Exit mobile version