கருணாநிதி தொகுதி உட்பட 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. வெற்றி பெறும்- தம்பிதுரை

திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று, மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார்.

திருச்சி மாவட்டம், மணப்பாறை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட மருங்காபுரி ஒன்றியத்தில் அவர் சுற்றுப்பயணம் மேற்கொண்டு மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தம்பிதுரை, வேறு வழியில் சென்று ஆட்சியை கவிழ்க்க முயற்சித்த சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கிடைத்துள்ள சரியான தீர்ப்பு இது என்றார்.

இடைத்தேர்தல் நடைபெற்றால் 18 தொகுதி மட்டுமல்ல, கருணாநிதி வென்ற திருவாரூர் உள்ளிட்ட 20 தொகுதிகளிலும் அ.தி.மு.க. மகத்தான வெற்றி பெறும் என்று அவர் தெரிவித்தார்.

Exit mobile version