அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகள் நியமனம்

அதிமுக மகளிர் அணி மற்றும் இலக்கிய அணிக்கு புதிய நிர்வாகிகளை அதிமுக தலைமை நியமித்துள்ளது.

இது தொடர்பாக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிமுக மகளிர் அணிச் செயலாளராக முன்னாள் அமைச்சர் பா. வளர்மதி நியமிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மகளிர் அணி இணைச் செயலாளராக செங்கல்பட்டு கிழக்கு மாவட்ட மகளிர் அணிச் செயலாளராக உள்ள சட்டமன்ற உறுப்பினர் மரகதம் குமரவேல் நியமிக்கப்பட்டுள்ளார்.

அதிமுக இலக்கிய அணிச் செயலாளராக முன்னாள் அமைச்சர் வைகைச்செல்வனை அதிமுக தலைமை நியமித்துள்ளது.

அதிமுக வர்த்தக அணிச் செயலாளராக ஆலந்தூர் கிழக்கு பகுதிக் கழகச் செயலாளர் வெங்கட்ராமனும், இணைச் செயலாளராக சாத்தான்குளம் ஊராட்சி ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் ஆனந்தராஜாவும் நியமனம் செய்யப்படுவதாக அதிமுக தலைமை அறிவித்துள்ளது.

Exit mobile version