கை சின்னம் ஜெயித்தால் வெற்றுக்கை தான் காண்பிப்பார்கள் : தம்பிதுரை

தமிழகத்தில் காங்கிரசின் கை சின்னத்திற்கு வாக்களித்தால் குடிக்க கையளவு தண்ணீர்கூட கிடைக்காது என்று மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை தெரிவித்துள்ளார். கரூர் நாடாளுமன்ற தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிடும் தம்பிதுரை, மேட்டுப்பாளையம், தளவாபாளையம், கிழக்கு தவிட்டுப்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் தீவிர தேர்தல் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். தேர்தல் பிரசாரத்தில் பேசிய அவர், கை சின்னம் ஜெயித்தால் வெற்றுக்கை தான் காண்பிப்பார்கள் என்று தெரிவித்தார்.

Exit mobile version