ஆறுமுகசாமி ஆணையம் முன்பு நேரில் ஆஜராகி தம்பிதுரை விளக்கம்

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் மறைவு குறித்து விசாரணை மேற்கொண்டுள்ள ஆறுமுக சாமி ஆணையம் முன்பு மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் 75 நாட்கள் சிகிச்சை பெற்றார். இதுகுறித்து ஆறுமுகசாமி விசாரணை ஆணையம் விசாரணை மேற்கொண்டு வருகிறது. இந்த ஆணையம் முன்பு சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேற்று ஆஜராகி விளக்கம் அளித்தார்.

இந்நிலையில், மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை இன்று நேரில் ஆஜராகி உள்ளார். மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்தபோது, ஆளுநர், காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி உள்ளிட்டவர்கள் வருகை தந்தனர். அப்போது, தம்பிதுரை உடனிருந்தார். இதுகுறித்து அவரிடம் விசாரணை மேற்கொள்ளப்படும் என கூறப்படுகிறது.

Exit mobile version