மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்தும் மாநில அரசுக்கு தான் கூடுதல் அதிகாரம் உள்ளது என மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை கூறியுள்ளார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர், மத்திய அரசே அனைத்து திட்டங்களையும் செயல்படுத்துவது போலவும், மாநில அரசு எதுவுமே செய்யவில்லை என்பது போன்ற கற்பனையான கருத்தை மத்திய அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் கூறுவது வருந்ததக்கது என கூறினார். மேலும் மக்களுக்கான திட்டங்களை செயல்படுத்துவது மாநில அரசு தான் எனவே, அதற்கே கூடுதல் அதிகாரம் உள்ளது என்றும் அவர் தெரிவித்தார். தமிழக அரசின் திட்டங்களுக்காக மத்திய அரசு நிதி ஒதுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்த அவர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் கிராமங்களை தத்தெடுக்கும் திட்டத்துக்காக இதுவரை ஒதுக்கவில்லை என்றும் அவர் கூறினார்.