எதிர்பார்ப்பை எகிறவைத்த “Thalapathy 64”படத்தின் படப்பிடிப்பு தொடக்கம்

கடந்த 3 நாட்களாக இணையத்தில் செம ட்ரெண்டாக இருந்தது “Thalapathy 64” படத்தின் அப்டேட்டுகள். பிகில் படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தில் நடிகர்கள் விஜய் சேதுபதி, ஆண்டனி வர்கீஸ்,சாந்தனு, நடிகை மாளவிகா மோகன் நடிக்க உள்ளதாக படக்குழு வெளியிட்ட அதிகாரப்பூர்வ அப்டேட்டுகளால் ரசிகர்களை மகிழ்ச்சிக்குள்ளானார்கள்.

இந்நிலையில் இன்றைய தினம் Thalapathy64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் விமரிசையாக தொடங்கியுள்ளது. படத்தின் பூஜை நடைபெற்றதை தொடர்ந்து அதனை கொண்டாடும் விதமாக #Thalapathy64Pooja என்ற ஹேஸ்டேக் ட்விட்டர் ட்ரெண்டிங்கில் முதல் இடத்தில் இடம் பிடித்துள்ளது. அனிருத் இசையமைக்கும் இந்த படம் 2020ம் ஆண்டு மே மாதத்தில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version