மாஸ் தான்..தளபதி 64 படத்தில் இதெல்லாம் இருக்கா !

பிகில்  திரைப்படத்தைத் தொடர்ந்து விஜய் நடிக்கும் 64 வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார்.இந்தப் படத்தில் விஜய் சேதுபதி வில்லனாக நடிக்கிறார். மேலும் நடிகர் சாந்தனு, நடிகை மாளவிகா மோகனன், ஆண்டனி வர்கீஸ், விஜே ரம்யா,கௌரி கிஷன்  உள்ளிட்ட பலர்  நடிக்கின்றனர் .

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு டெல்லி, சென்னையில் நடைபெற்ற நிலையில், இரண்டாம் கட்டப்படப்பிடிப்பு கர்நாடகாவில் ஷிமோகா என்ற இடத்தில் நடைபெற்றுவருகிறது.இங்கு விஜய் மற்றும் விஜய் சேதுபதி இடையேயான சண்டை காட்சிகள் படமாக்கப்பட்டுள்ளன.

இந்நிலையில்,படத்தின் கதாநாயகியான மாளவிகா மோகனும் விஜய் சேதுபதியுடன் மோதும் சண்டை காட்சிகளில் நடித்துள்ளார் என புது தகவல் வெளியாகிவுள்ளது.ஆனால் இதுகுறித்த அதிகாரப்பூர்வ தகவல் ட்ரைலரில் தான் நமக்கு தெரியவரும்.மேலும் தளபதி 64 படத்தின் first look poster இன்று மாலை 5 மணிக்கு வெளியாகவுள்ளது .

Exit mobile version