வைரலாகும் விஜயின் ‘தளபதி 64’ shooting spot புகைப்படங்கள்…

“பிகில்” படத்தை தொடர்ந்து நடிகர் விஜய் அடுத்ததாக நடித்து வரும் தளபதி 64-வது படத்தை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் இயக்கி வருகிறார். இதில் விஜய்க்கு ஜோடியாக மாளவிகா மோகனும், வில்லனாக நடிகர் விஜய் சேதுபதி நடித்து வருகின்றனர். மேலும் சாந்தனு, தொகுப்பாளினி ரம்யா, 96 கௌரி ஆகிய திரைப்பிரபலங்கள் இணைந்துள்ளனர்.

டெல்லியில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு நடந்த வந்த நிலையில்,தற்போது கர்நாடகாவில் விறுவிறுப்பாக படப்பிடிப்பு நடந்துவருகிறது. இன்று படப்பிடிப்புக்கு செல்வதற்கு முன்பு நடிகர் விஜய் நடந்து வந்து ரசிகர்களுக்கு ஹாய் சொல்லுகிறார்.அவரின் இந்த புகைப்படங்கள் மற்றும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

தளபதி 64 shooting spot புகைப்படங்கள் அனைத்திலுமே விஜய் கருப்பு நிற கண்ணாடியை அணிந்திருப்பதால், விஜய் இந்த படத்தில் கண் தெரியாதவராக நடித்து இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

Exit mobile version