அறுபடை வீடுகளில் மூன்றாம் படை வீடான பழனி முருகன் கோவிலில் தைப்பூசத் திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.
அதனை முன்னிட்டு தமிழகம் முழுவதுமிருந்து பல்லாயிரக் கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனர். தைப்பூசத் திருவிழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம் 20ம் தேதியும், 21ம் தேதி தைப்பூசத் தேரோட்டம் நடைபெற உள்ளது. பாதயாத்திரை வரும் பக்தர்களின் வசதிக்காக ஐந்நூற்றுக்கும் மேற்பட்ட குடிநீர் தொட்டிகள் , கழிவறை, மருத்துவம் உள்ளிட்ட வசதிகளை கோவில் நிர்வாகம் மற்றும் மாவட்ட நிர்வாகமும் ஏற்பாடு செய்துள்ளன. பக்தர்களின் பாதுகாப்பிற்காக மூவாயிரம் போலீசார் பழனியில் குவிக்கப்பட்டுள்ளனர்.