திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலில் தைபூச விழாவையொட்டி ஏராளாமான பக்தர்கள் சுவாமியை தரிசனம் செய்தனர்.
ஆறுபடை வீடுகளில் முதல் படைவீடாக கருதப்படும் திருப்பரங்குன்றம் அருள்மிகு சுப்பிரமணிய ஸ்வாமி திருக்கோயிலில் இன்று தைப்பூச விழா விமர்சையாக நடைபெறுகிறது. இதனையொட்டி உற்சவர் சண்முகர், தெய்வானைக்கு சிறப்பு அபிஷேகங்கள், அலங்காரம் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. தைப்பூச விழாவையொட்டி ஏராளாமான பக்தர்கள் நீண்ட வரிசையில் இருந்து சுவாமி தரிசனம் செய்தனர். பக்தர்கள் கூட்டம் காரணமாக ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டிருந்தது.
தைப்பூச திருவிழாவை முன்னிட்டு திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோயிலுக்கு ஆயிரக்கணக்கான பக்தர்கள் பாதயாத்திரையாக வந்து கடலில் புனித நீராடி சுவாமி தரிசனம் செய்து வருகின்றனர். தமிழ் கடவுள் முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் இரண்டாம் படைவீடான திருச்செந்தூர் சுப்பிரமணியசுவாமி கோவிலில் தைபூசத்தை முன்னிட்டு அதிகாலை 3.மணிக்கு நடைதிறக்கப்பட்டது. 3.30 மணிக்கு விஸ்வரூப தீபாராதனை நடைபெற்றது.
6 மணிக்கு உதயமார்த்தாண்ட அபிஷேகம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து 8.30 மணிக்கு தீர்த்தவாரி நடைபெறும். பகல் 12 மணிக்கு சுவாமிக்கு தைபூச மண்டகபடி மண்டபத்தில் அபிஷேகம்,அலங்காரம் நடைபெற்று வீதி உலா நடைபெறுகிறது. திருநெல்வேலி, கன்னியாகுமரி, இராமநாதபுரம், ஆகிய மாவட்டங்களிருந்து காவடி எடுத்து, வேல்குத்தி பாதயாத்திரையாக வந்த பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் அதிகாலை முதல் கடலில் புனித நீராடி நீண்ட வரிசையில் நின்று சுவாமி தரிசனம் செய்தனர். ஊர்காவல்படையினர், ஆயுதபடை காவலர்கள் உட்பட 150 காவல்துறையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.