கொரோனா தடுப்பூசியை குரங்குகளில் பரிசோதிக்கும் தாய்லாந்து!

ஆசிய நாடான தாய்லாந்தில் மூவாயிரத்திற்கும் மேற்பட்டோர் நோய்த்தொற்றுக்கு ஆளாகி 50 க்கும் அதிகமானோர் உயிரிழந்துள்ளனர். இந்த நிலையில் தாய்லாந்தும் கொரோனாவுக்கான தடுப்பூசிகளை கண்டறியும் முயற்சியில் இறங்கியது. தேசிய தடுப்பூசி இன்ஸ்டிட்யூட்டும் சுல்லாங்கோன் பல்கலைக்கழகமும் இணைந்து உருவாக்கிய தடுப்பூசியை சமீபத்தில் எலிகளுக்கு பரிசோதித்து வெற்றி கண்டனர். அந்த தடுப்பூசி எலிகளின் உடலில் கொரோனாவுக்கு எதிரான ஆண்டிபாடிகளை உருவாக்கியது. இதனையடுத்து குரங்குளில் தடுப்பூசியை பரிசோதிக்கத் துவங்கியுள்ளனர். குரங்குகளில் செய்யப்படும் பரிசோதனை முடிவுகள் செப்டம்பரில் தெளிவாக கிடைக்கும் என்றும், இது நிச்சயம் வெற்றி பெறும் என்றும் மருத்துவர்கள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். 

Exit mobile version