தாய்லாந்தில் வித்தியாசமான காபி கடை ஒன்றை திறந்துள்ளனர். அந்த காபி கடை பெயர் ‘கிட் மாய் டெத்’. இந்த காபி கடையில் முழுவதும் சவப்பெட்டி, வண்ண மலர்கள், எலும்புக்கூடுகள் என்று பயமுறுத்தும் வகையில் கருமையான நிறங்களை அதிகமாக உபயோகித்து அலங்காரம் செய்யப்பட்டிருக்கிறது.
கடையில் தான் இப்படி என்றால் சாப்பிடக்கூடிய உணவு பொருட்களின் பெயரும் வலி, நோய், மரணம் என்று வித்தியாசமாகப் பெயர் வைத்திருக்கிறார்கள்.
இந்த காபி கடையில் உள்ள சவப்பெட்டியில் படுத்துக்கொண்டு புகைப்படம் எடுத்தால் சிறப்பு தள்ளுபடியும் கொடுக்கிறார்கள்.
இங்கே இருக்கும் பொருட்களை எல்லாம் பார்க்கும் போது மரணம் பற்றிய சிந்தனை வரும். உயிரோடு இருப்பது எவ்வளவு அற்புதமானது என்று தோன்றும். இதனால், ஒவ்வொரு விநாடியையும் மகிழ்ச்சியோடு வாழத் தோன்றும் என்று கூறுகிறார் இந்த காபி கடையின் நிறுவனர்.