அமெரிக்காவில் பெண்ணின் வங்கி கணக்கிற்கு தவறுதலாக 37 மில்லியன் டாலர் வரவு

பணம் என்றால் பிணமும் வாயை திறக்கும் என்பார்கள். ஆனால் இங்கே, ஒருவருடைய வங்கிக் கணக்கில், 37 மில்லியன் டாலர் தவறுதலாக வரவு வைக்கப்பட்டாலும், அதைக்கண்டு ஆனந்தப்படாமல், தவறுதலாக வரவு வைக்கப்பட்ட பணத்தை, வங்கியிடமே ஒப்படைத்துள்ளார்.

வந்தா வரவில் வச்சிக்கோ, போனா செலவில் வச்சிக்கோ என்ற வரிகளுக்கு ஏற்றவாறு, நமக்கெல்லாம் பேங்க் அக்கவுண்ட்-ல பணம் எதாவது தவறுதலா ஏறி இருந்த மொதல நம்ம நினைவுக்கு வரதுலாம், செந்தில் கவுண்டமணி காமெடிதாங்க.

அந்த பணம் எங்க இருந்து வந்ததுனு கூட நாம யோசிக்க மாட்டோம்.. அப்படியே யோசித்தாலும் கடவுள் நமக்கு கொடுத்த கிப்ட்டுனு சொல்லிட்டிட்டு, செலவு பன்னுவோம். ஆனா இங்க ஒரு தம்பதி, இப்படி எந்த அலப்பரையும் பன்னாம, தன்னுடைய பேங்க அக்கவுண்ட்ல தவறுதலா ஏறுன 37 மில்லியன் டாலரையும், பேங்க்குலயே ஒப்படைச்சிருக்காங்க.

அமெரிக்காவின் டெக்சஸ் மாநிலத்தை சேர்ந்தவர் ரூத் பெல்லன் என்ற பெண்ணுக்கு, அதிகாலை நேரத்திலேயே கடவுள் ஒரு அதிர்ஷ்ட செய்தியை, தொலைபேசி வாயிலா அனுப்பிருக்காரு. ரூத் பெல்லனோட வங்கி கணக்குல, 37 மில்லியன் டாலர் கிரெடிட் ஆகியிருக்கிற குறுஞ்செய்திதான் அது.

அந்த குறுஞ்செய்தியை பார்த்ததும் அதிர்ச்சியும் ஆனந்தமும் அடைஞ்சிருக்காங்க ரூத் பெல்லன். பின்னர் இதை யார்கிட்டயாவது சொல்லி ஆகனுமேனு, தூங்கி கொண்டிருந்த தன்னுடைய கணவரை எழுப்பி நடந்த விஷயத்தை கூறியிருக்காங்க.

ரூத் பெல்லனோட கணவர் இந்த செய்தியை கேட்டதும், எந்த ஒரு ஆனந்தமும் அடையாமல், பேங்குக்கு கால் பன்னி தகவல் தெரிவிச்சிருக்காரு. பின்னர் பேங்க் அதிகாரிகளும் நடந்த தவறுதலுக்கு மன்னிப்பு கேட்டு, பணத்தை திரும்ப எடுத்துக்கிட்டாங்க.

விலைவாசி உயர்வால, காசேதான் கடவுளப்பா, அது காக்கைக்கும் தெரியுமப்பானு ஒருபக்க நாம புலம்பி கொண்டு இருக்கையில, இந்த மாறி ஒரு செய்தியை தொலைக்காட்சில பார்க்கும் போது, நம்ம மனசுல ஓடுறது எல்லாம் ஒன்னுதாங்க… நமக்கெல்லாம் இந்த மாறி வாய்ப்ப ஏன் இந்த கடவுள் ஏற்படுத்தி தரமாட்டேங்குறான் என்ற வரிகள்தான்.

அதிர்ஷ்டம் கூறையை பிச்சிகிட்டு கொட்டும்னு சொல்லுவாங்க ஆன இவங்க வாழ்க்கையில் உண்மையாவே அதிர்ஷ்டம் கூரையை பிச்சிகிட்டு கொட்டிருக்குனுதாங்க சொல்லனும்… என்னதான் அப்படி கொட்டினாலும், கைக்கு எட்டுனது வாய்க்கு எட்டலையேப்பா…

Exit mobile version