ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான முதல் நாள் தேர்வு நிறைவு

தமிழகம் முழுவதும் இன்று நடைபெற்ற ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வுக்கான முதல் நாள் தேர்வு நிறைவடைந்தது.

அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியராகப் பணியாற்றுவதற்கு, தகுதித் தேர்வில் தேர்ச்சி பெறுவது அவசியம். கடந்த 2010ஆம் ஆண்டு ஆகஸ்டு 23க்கு பிறகு பணியில் சேர்ந்த ஆசிரியர்களும், தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வை எழுதுவதற்காக சுமார் 6 லட்சம் பேர் விண்ணப்பித்துள்ளனர். இவர்களுக்கான ஆசிரியர் தகுதித் தேர்வு இன்றும், நாளையும் நடைபெறுகிறது. முதல்நாளான இன்று 471 மையங்களில் சுமார் ஒன்றரை லட்சம் பேர் தேர்வெழுதினர்.

ஆயிரத்து 81 மையங்களில் நாளை தேர்வு நடைபெற உள்ளது. இரண்டு தாள்களாக நடைபெறும் தேர்வில், ஆரம்பக் கல்வி ஆசிரியர்கள் முதல் தாள் தேர்விலும், இடைநிலைக் கல்வி ஆசிரியர்கள் இரண்டாவது தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version