தமிழகம் முழுவதும் ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ம் தாள் தேர்வு தொடங்கியது

ஆசிரியர் தகுதித் தேர்வின் 2ஆம் தாள் தமிழகம் முழுவதும் தொடங்கி நடைபெற்று வருகிறது.

மத்திய அரசின், கட்டாய கல்வி உரிமை சட்டப்படி, ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்தும் ஆசிரியர்கள், ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டது. இந்த சட்டம், தமிழகத்தில், 2010ல் அமலுக்கு வந்தது. இதன்படி, கல்வியியல் படிப்பு முடித்த பட்டதாரிகள், ஒன்று முதல் ஐந்தாம் வகுப்பு வரை பயிற்றுவிக்க, ஆசிரியத் தகுதித் தேர்வு முதல் தாளிலும், எட்டாம் வகுப்பு வரை பாடம் நடத்த, இரண்டாம் தாள் தேர்விலும் தேர்ச்சி பெற வேண்டும்.

தமிழகத்தில் இதுவரை, நான்கு முறை, ஆசிரியத் தகுதித் தேர்வு நடத்தப்பட்டுள்ளது. ஐந்தாவது முறையாக நடக்கும் தேர்வின் முதல் தாள் நேற்று தமிழகம் முழுவதும் 471 மையங்களில் நடைபெற்றது. இன்று 2ஆம் தாள் தேர்வு தொடங்கி உள்ளது. தமிழகம் முழுவதும் ஆயிரத்து 81 மையங்களில் தேர்வு நடைபெறுகிறது. சென்னையில் இரண்டாம் தாள் தேர்வுக்கு 60 மையங்கள்
அமைக்கப்பட்டு தேர்வுகள் நடைபெறுகிறது. தேர்வு பணியில், ஒரு லட்சம் ஆசிரியர்கள், அரசு ஊழியர்கள், போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். முறைகேடுகளை தடுக்க, பறக்கும் படையினர்
கண்காணித்து வருகின்றனர்.

Exit mobile version