ஜோலார்பேட்டை அருகே காவிரி நீர் தேக்க தொட்டியிலிருந்து ரயில் நிலையம் வரை பதிக்கப்பட்ட குழாய்களில் நீரை வெளியேற்றி, சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.
வேலூர் மாவட்டம், ஜோலார்பேட்டையருகே மேட்டுசக்கரக்குப்பம் பகுதியில் இருக்கக்கூடிய நீர்த்தேக்கதொட்டியில் இருந்து, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்திற்கு ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீரை கொண்டு வரும் பணியை தற்போது அதிகாரிகள் முடித்துள்ளனர். இதனிடையே ராட்சத குழாய் வழியாக திறக்கப்பட்ட நீரானது, ஜோலார்பேட்டை ரயில் நிலையத்தில் உள்ள நீர்தேக்கதொட்டிக்கு சரிவர செல்கிறதா என பரிசோதிக்கப்பட்டது. இந்த ஆய்வில் தமிழ்நாடு குடிநீர் வாரிய அதிகாரிகள் மற்றும் ரயில்வே அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர். முன்னதாக, தமிழக அரசின் சார்பில் இப்பணிகளுக்காக 60 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டு, நாள் ஒன்றுக்கு 10 மில்லியன் லிட்டர் நீரை 4 கட்டங்களாக கொண்டு செல்ல பணிகள் நடைபெற்று வருகின்றன.