மதுரையில் இருந்து போடிநாயக்கனூர் பகுதி வரையில் அமைக்கப்பட்டு வரும் ரயில் பாதையில், முதற்கட்டமாக மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான பாதையில் சோதனை ஓட்டம் நடைபெற்றது.
இழுபறியில் இருந்து வந்த மதுரை-போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை திட்டப் பணிகள், தேனி நாடாளுமன்ற உறுப்பினர் ரவிந்திரநாத் குமாரின் கோரிக்கைக்கு ஏற்ப, விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், மதுரை முதல் உசிலம்பட்டி வரையிலான அகல ரயில் பாதையின் பணிகள் முடிவடைந்ததையடுத்து, பணிகளை ஆய்வு செய்வதற்காக சோதனை ஓட்டம் நடைபெற்றது. விரைவில் மதுரை- போடிநாயக்கனூர் அகல ரயில்பாதை பணிகள் முடிக்கப்பட்டு, ரயில்கள் இயக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.