டெஸ்ட் கிரிக்கெட்டில் கறை பட்டுவிடக் கூடாது: சச்சின்

நான்கு நாட்கள் டெஸ்ட் கிரிக்கெட் போட்டிக்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள சச்சின் டெண்டுல்கர், டெஸ்ட் போட்டி என்பதுதான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது என்று கூறியுள்ளார்.

உலகம் முழுவதும் தற்போது உள்ள கிரிக்கெட் ரசிகர்கள், ஒருநாள் போட்டி மற்றும் இருபது ஓவர் கிரிக்கெட் மீதான பார்வை, டெஸ்ட் போட்டிகள் மீது இல்லை. இதனால், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் புது புது மாற்றங்களை கொண்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக, சர்வதேச கிரிக்கெட் சங்கம், ஐந்து நாட்கள் வரை நடத்தப்பட்டு வந்த டெஸ்ட் போட்டிகளை நான்கு நாட்களாக குறைக்க பரிசீலனை செய்து வருகிறது. ஆஸ்திரேலியா மற்றும் இங்கிலாந்து போன்ற கிரிக்கெட் சங்கங்கள் ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் முன்னணி வீரர்கள் எதிர்ப்பு இதற்கு தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில், நான்கு நாட்கள் டெஸ்ட் போட்டி குறித்து சச்சின் டெண்டுல்கர் கூறுகையில், டெஸ்ட் போட்டியின் ஐந்தாவது நாளில், ஆடுகளம் முழுவதும் கடினத்தன்மை குறைந்து வெடிப்புகள் உருவாகும். அப்போது, பந்துவீசும் சுழற்பந்து வீச்சாளர்கள், போட்டியில் ஆதிக்கம் செலுத்துவது மட்டுமல்லாமல் ஆட்டத்தை மாற்றி அமைக்கக் கூடியவர்களாக கூட இருப்பார்கள். பந்து வீச்சாளர்ளும் ஆடுகளத்தின் தன்மையை எதிர்பார்த்துக் கொண்டிருப்பார்கள். இதுவே டெஸ்ட் கிரிக்கெட்டின் ஒரு பகுதி.

இப்படி இருக்கையில், சுழற்பந்து வீச்சாளர்களின் சாதகத்தை பறிப்பது நியாயம் தானா? என்று கேள்வி எழுப்பிய சச்சின், ஒருநாள் போட்டி மற்றும் டி20 போட்டியைத் தொடர்ந்து, 100 பந்துகள் கிரிக்கெட் போட்டியும் தற்போது வர இருப்பதாக தெரிவித்தார். மேலும், கிரிக்கெட்டில் டெஸ்டி போட்டி தான் தூய்மையான வடிவம். அதில் கறை பட்டுவிடக் கூடாது’’ என்று தெரிவித்தார்.

முன்னதாக, இந்திய அணி கேப்டன் விராட் கோலி தனது எதிர்ப்பை வெளிப்படுத்தினார். ‘‘தற்போது நான்கு நாட்கள் என்று சொல்கிறார்கள். பின்னர், போட்டியை மூன்று, இரண்டு என்று குறைத்துக் கொண்டே ஒரு கட்டத்தில் டெஸ்ட் போட்டியே தேவையில்லை என்று அவர்கள் கூறுவார்கள்” என்று கருத்து தெரிவித்திருந்தார்.
[4:02 PM, 1/7/2020] petchi avudaiappan:

Exit mobile version