பொதுமக்கள் போன்று ஊடுருவி, காஷ்மீரில் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தியதாக சிஆர்பிஎப் தெரிவித்துள்ளது. புல்வாமா தீவிரவாத தாக்குதல் குறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடம் சிஆர்பிஎப் அறிக்கை சமர்ப்பித்திருக்கிறது. கடும் பனிப்பொழிவு காரணமாக, 3 நாட்களுக்கு முன்பு தான் வாகனங்கள் செல்ல ஏதுவான சூழல் ஏற்பட்டதாக கூறியுள்ளது. சிஆர்பிஎப் வாகனங்கள் சென்றபோது, பொதுமக்களின் வாகனங்கள் செல்லவும் அனுமதிப்பட்டதாக குறிப்பிட்டுள்ள சிஆர்பிஎப், பொதுமக்களின் வாகனங்கள் சென்ற பாதையில் தீவிரவாதிகள் வாகனத்தை இயக்கி தாக்குதலில் ஈடுபட்டதாக தெரிவித்தது.
ஐஇடி வெடிகுண்டுகளை எதிர்கொள்ளும் வகையில் வாகனங்கள் வடிவமைக்கப்படவில்லை என்று கூறப்பட்டிருக்கிறது. கல்குவாரிக்கு பயன்படுத்தப்படும் வெடிப்பொருட்களை கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டிருப்பதாக சிஆர்பிஎப் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.