ஜம்மு-காஷ்மீரில் தேர்தலின் போது தீவிரவாதிகள் தாக்க திட்டம்

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில், நாடாளுமன்ற தேர்தலின்போது, பெரியளவிலான தாக்குதலை நடத்த, பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக, உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

நாடு முழுவதும், வரும் 11ஆம் தேதி தொடங்கி, 7 கட்டங்களாக, மக்களவைத் தேர்தல் நடைபெறுகிறது. இதில், ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், மொத்தமுள்ள 6 மக்களவைத் தொகுதிகளுக்கு, வருகிற 11ஆம் தேதி தொடங்கி, மே மாதம் 6ஆம் தேதி வரை, 5 கட்டங்களாக வாக்குப்பதிவு நடைபெறுகிறது.புல்வாமா தாக்குதலைத் தொடர்ந்து, காஷ்மீரில் நீடித்து வரும் பதற்றத்தின் காரணமாகவும், முன்னெச்செரிக்கை நடவடிக்கைகளாலும், அனந்த்நாக் தொகுதிக்கு மட்டும், 3 கட்டங்களாக தேர்தல் நடைபெறுகிறது.

இந்தநிலையில், ஜம்மு-காஷ்மீரில், தேர்தலை சீர்குலைக்கும் வகையில், மாநிலத்தில் பல்வேறு இடங்களில், பெரியளவிலான தாக்குதலை நடத்த பாகிஸ்தான் தீவிரவாத இயக்கங்கள் திட்டமிட்டிருப்பதாக உளவுத்துறை தெரிவித்துள்ளது. இதற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Exit mobile version