பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கம்

பயங்கரவாதி மசூத் அசாரின் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளதாகவும், அவரது பயணங்களுக்கு தடை விதிக்கப்படுவதாகவும் பாகிஸ்தான் அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

மும்பை தாக்குதல் முதல் புல்வாமா தாக்குதல் வரை மூளையாக இருந்து செயல்பட்ட ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் தீவிரவாதி மசூத் அசாரின் மீது கடுமையான நடவடிக்கைகள் கொண்டு வரப்பட்டு ரெட் கார்டு போடப்பட்டிருந்தது. இந்தநிலையில் தற்போது அவரது சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளாதாக பாகிஸ்தான் அரசாங்கம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் பயங்கரவாதி மசூத் அசாரின் பயணங்களுக்கு தடை விதிப்பதாகவும் தெரிவித்துள்ளது.

அதேசமயம் பாகிஸ்தானை தலைமையகமாக கொண்டு இளைஞர்களை தீவிரவாதிகளாக மாற்றி நாச வேலைகளை செய்து வந்த மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக ஐ.நா. அறிவித்தது இந்தியாவிற்கு கிடைத்த வெற்றியாகவே பார்க்கப்படுகிறது.

Exit mobile version