சவுதி அரேபியாவில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலையின் மீது ஆளில்லா குட்டி விமானங்கள் மூலம் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ரியாத்தில் உள்ள புக்கியாக் மற்றும் குரைஸ் உள்ளிட்ட பகுதிகளில் அரம்கோ நிறுவனத்தின் எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை உள்ளது. இதன் மீது ஆளில்லா இரு குட்டி விமானங்கள் தாக்குதல் நடத்தியது. இதில் ஆலையில் பற்றிய தீயை அணைக்கும் பணிகள் மும்மரமாக நடைபெற்றதாகவும், தீ அணைக்கப்பட்டு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளதாகவும் அந்நாட்டின் உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை ஏமன் குர்தி பயங்கரவாத அமைப்பு நடத்தியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கடந்த மாதம் இந்த நிறுவனத்தின் இயற்கை எரிவாயு உற்பத்தி செய்யும் இடத்தில் ஏமன் போராளிகள் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.