பயங்கரவாதத்தினால் சுமார் ரூ.72 லட்சம் கோடி இழப்பு: பிரதமர் மோடி

பயங்கரவாதத்தினால் உலகப் பொருளாதாரத்திற்கு சுமார் 72 லட்சம் கோடி ரூபாய் வரை இழப்பீடு ஏற்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

பிரேசில் தலைநகர் பிரேசிலியாவில் நடைபெற்ற பிரிக்ஸ் நாடுகளின் 11வது மாநாட்டில் பேசிய பிரதமர் மோடி, அதிகரித்து வரும் பயங்கரவாதத்தால் வளரும் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி 1.5 சதவீதம் அளவுக்கு குறைந்துவிட்டதாக புள்ளி விவரம் தெரிவிப்பதாகவும் கடந்த 10 ஆண்டுகளில் உலகம் முழுவதும் நிகழ்த்தப்பட்ட பயங்கரவாத தாக்குதல்களால் சுமார் 2.25 லட்சம் பேர் உயிரிழந்துள்ளனர் எனக் குறிப்பிட்டார். மேலும் பிரிக்ஸ் நாடுகளுக்கிடையே பொருளாதார ஒத்துழைப்பு அதிகரிப்பதில் கவனம் செலுத்த வேண்டும் எனவும் கூறினார்.

11வது பிரிக்ஸ் மாநாட்டில் பிரதமர் மோடியுடன், பிரேசில், சீனா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா நாடுகளின் அதிபர்கள் பங்கேற்றனர். இந்நிலையில் பிரேசில் மாநாட்டை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியாவுக்கு புறப்பட்டார்.

Exit mobile version