பயங்கரவாதத்தை ஒரு மதத்துடன் தொடர்புபடுத்தி பேசுவதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்று உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
ஹைதாராபாத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் பேசிய அவர், பயங்கரவாதத்தை சாதி மதம் சார்ந்து சிலர் பார்க்கிறார்கள் என்றும் அது சரியானது இல்லை என்றும் தெரிவித்தார். மேலும் தேசியப் புலனாய்வு அமைப்பின் நடவடிக்கையால் பயங்கரவாதத்திற்கு செல்லும் நிதிகள் தடுக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார். பயங்கரவாதத்திற்கு எதிரான இந்தியாவின் நடவடிக்கைக்கு உலக நாடுகள், இஸ்லாமிய நாடுகள் ஒத்துழைப்பு அளிப்பது மகிழ்ச்சி அளிக்கிறது என்றும் குறிப்பிட்டார்.
அபுதாபியில் நடைபெற்ற இஸ்லாமிய நாடுகளின் கூட்டமைப்பு மாநாட்டில் பாகிஸ்தானின் எதிர்ப்பையும் மீறி இந்தியா சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.