மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ள பயங்கரவாதத்தை ஒழிக்க ஒன்றிணைய வேண்டும் என்று பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்கள் சந்திப்பின்போது பிரதமர் மோடி வலியுறுத்தினார்.
ஜி20 மாநாடு துவங்குவதற்கு முன்பாக பிரிக்ஸ் நாடுகள் கூட்டமைப்பு தலைவர்கள் சந்தித்து பேசினர். இந்திய பிரதமர் மோடி, ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், சீன அதிபர் ஜி ஜின்பிங், தென் ஆப்ரிக்க அதிபர் சிரில் ரமபோசா, பிரேசில் அதிபர் ஜார் பொல்சொனாரோ ஆகியோர் சந்திப்பில் பங்கேற்றனர்.
இந்தக் கூட்டத்தில் பேசிய பிரதமர் மோடி, பயங்கரவாதம் மனித குலத்திற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக உள்ளதாக தெரிவித்தார். பயங்கரவாதத்திற்கு எதிராக அனைவரும் ஒன்றிணைந்து போராட வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார். பருவநிலை மாற்றம் குறித்தும் தனது கருத்துகளை பிரதமர் மோடி பகிர்ந்துகொண்டார். பிற நாட்டு தலைவர்களும் முக்கிய பிரச்னைகள் குறித்து தங்களின் கருத்துகளை வெளிப்படுத்தினர்.