இலங்கை கல்முனை பகுதியில் நடந்த தீவிரவாத தாக்குதல்

இலங்கை கல்முனை பகுதியில் 15 பேர் பலியான சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

கல்முனை சாய்ந்தமருது பகுதியில், பாதுகாப்பு படையினர் நேற்று முன்தினம் சோதனை நடத்தினர். அப்போது அங்கு பயங்கரவாதிகள் பதுங்கியுள்ள வீட்டை சுற்றி வளைத்தனர். இதையடுத்து, உள்ளே இருந்த பயங்கரவாதிகள் துப்பாக்கியால் சுட்டு தாக்குதல் நடத்தினர். சிறிது நேரத்தில் வீட்டில் குண்டு வெடித்து சிதறியது. அதிரடிப்படை தாக்குதலை சமாளிக்க முடியாமல், உள்ளே இருந்தவர்கள் தற்கொலைத் தாக்குதல் நடத்தியதில், 4 மனித வெடிகுண்டு பயங்கரவாதிகள் உள்பட 15 பேர் பலியாகினர். இந்நிலையில், இந்த தாக்குதல் சம்பவத்துக்கு ஐஎஸ் பயங்கரவாத இயக்கம் பொறுப்பேற்றுள்ளது.

Exit mobile version