தீவிரவாதிகள் – பாதுகாப்பு படையினர் இடையே துப்பாக்கிச்சண்டை – 2 தீவிரவாதிகள் சுட்டுக்கொலை 

ஜம்மு காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தாக்குதலில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். சோபியான் மாவட்டத்தில் தீவிரவாதிகள் நடமாட்டம் இருப்பதாக பாதுகாப்பு படையினருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதனையடுத்து அப்பகுதியை சுற்றி வளைத்த பாதுகாப்பு படையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். அப்போது தீவிரவாதிகள் திடீரென பாதுகாப்பு படையினரை நோக்கி துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், பாதுகாப்பு படையினரும் துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டனர்.

சுமார் 1 மணி நேரம் நடைபெற்ற இந்த துப்பாக்கிச் சண்டையில் தீவிரவாதிகள் 2 பேர் சுட்டுக்கொல்லப்பட்டனர். மேலும் பதுங்கியுள்ள தீவிரவாதிகளை கண்டறிய தேடுதல் பணி முடுக்கி விடப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

Exit mobile version