மெக்சிகோவில் பயங்கர நிலநடுக்கம்

மெக்சிகோவில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தால், கட்டங்களை குலுங்கியதால் பொதுமக்கள் உடனடியாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

வடக்கு அமெரிக்க நாடான மெக்சிகோவின் பசிபிக் கடற்கரையில் உள்ள அகாபுல்கோவில் (Acapulco) இந்திய நேரடிப்படி, காலை 7.50 மணியளவில் பயங்கர நிலநடுக்கம் ஏற்பட்டது. தலைநகர் மெக்ஸிகோ சிட்டின் தெற்கே 240 கிலோ மீட்டர் தொலைவில் நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ரிக்டர் அளவு கோலில் 7 புள்ளி 4 பதிவான இந்த நிலநடுக்கம் மெக்சிகோ சிட்டி நகரம் வரை கடுமையான அதிர்வுகளை ஏற்படுத்தியது. இதனால், அங்கு மின் தடை மற்றும் எரிவாயு கசிவு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கம் காரணமாக ஏராளமான கட்டடங்கள் குலுங்கியதால், பொதுமக்கள் உடனடியாக வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.

நிலநடுக்கம் காரணமாக மெக்சிகோவில், சுனாமி எச்சரிக்கை எதுவும் விடுக்கப்படவில்லை. இந்த நிலநடுக்கத்தால் கட்டடங்கள் இடிந்து விழுந்ததில் ஒருவர் உயிரிழந்ததாக தகவல் வெளியாகியுள்ளது. 

Exit mobile version